BHARATHIAR UNIVERSITY: COIMBATORE – 641 046 ,INDIA
SCHOOL OF DISTANCE EDUCATION (SDE)
PG Diploma in Applied Tamil
(NON LAB ORIENTED COURSE WITHOUT PRACTICALS AND PROJECT)
ANNUAL PATTERN (2011 – 2012)
தகுதி-ஏதேனும் ஒரு பட்டம்; காலம்-1 வருடம்
Paper
Paper - I -PG Dip-TA01- தமிழ்மொழித்திறன் வளர்த்தல்
Paper - II - PGDip-TA02 - COMPUTER APPLICATION –PRACTICAL
Paper - III -PGDip-TA 03 – இதழியல்
Paper - IV -PGDip-TA04 – படைப்புக்கலை
Paper - V -PGDip-TA05- மொழிபெயர்ப்பியல்
SYLLABUS
1.PGDip-TA01- தமிழ்மொழித்திறன் வளர்த்தல்
நோக்கம்
மொழித்திறன் என்பது மொழியை முறையாக ஒலித்தல், அதிலுள்ள சொற்களை எடுத்தாளுதல்,சொற்களால் ஆன வாக்கியங்கள்வழித் தகவல்களைச் செறிவாக வெளிப்படுத்துதல் ஆகியனவற்றைக் குறிக்கும். இவற்றை மையமாகக் கொண்டு பயன்பாட்டு முறையில் தமிழ் மொழித்திறனை வளர்த்துக் கொள்ளுவதற்கு ஏதுவாக இந்தத் தாள் அமைக்கப்பட்டுள்ளது.
அலகு -1: கேட்டல்
கேட்டல் வரையறை - கேட்டலின்வழிக் கற்றல் - கேட்டல் பழக்கத்தினை வளர்த்தல் - பாடல் பகுதிகளைப் படித்துச் சிறு வினாக்களின் வாயிலாக வளர்த்தல் - வானொலி கேட்டல் - பொருள் மாறாது சுருக்கி எழுதுதல் - பத்திகளையும் பெரிய பகுதிகளையும் சுருக்குதல் - பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிப் படித்தல் - செய்திகளை அறிதல் - நயம் பாராட்டல் - விளம்பரம் - கேட்டலுக்கும் பயிற்றலுக்குமுள்ள வேறுபாடுகள்.
அலகு 2. பேசுதலும் வாய்மொழிப் பயிற்சியும்
அழுத்தந்திருத்தமாகப் பேசுதல் - இலக்கண வழுவின்றிப் பேசுதல் – மரபு மொழி-பழமொழிகள்- தொடக்க நிலையில் பேச்சாற்றல் - சொற்போர் - கலந்துரையாடல் - வினாடி வினா, வாய்மொழிப் பயிற்சியின் இன்றியமையாமை - நோக்கங்கள்- பயன்கள்- உச்சரிப்பில் ஏற்படும் சிக்கல்கள் - மனப்பாடம் – கலந்துரையாடல்,சொற்போர்.சொற்பொழிவுகள், மன்றத்தில் பேசுதல்.
அலகு – 3: படித்தல், எழுதுதல்
படிக்கக் கற்பித்தலின் நோக்கங்கள் - படிக்கக் கற்பிக்கும் முறைகள், எழுத்துமுறைப் படிப்பு - சொல்முறைப் படிப்பு - களஞ்சியப் பெருக்கம் - படிப்பில் ஆர்வத்தைத் தூண்டல்- வாய்விட்டுப் படித்தல் - நன்மை, தீமைகள்- நூல்களைப் பயன்படுத்துதல் - நூலகப்படிப்பு- தின, வார,மாத இதழ்கள் படிக்கும் முறைகள் போன்றன - ஆழ்ந்த படிப்பு - அகன்ற படிப்பு நோக்கங்கள் – நிறை, குறைகள் - முதியோர்க்குப் படிக்கக் கற்பித்தல் - செயல்படு எழுத்தறிவு – நாட்டுப்புறக்கல்வி , கையொப்பம் - எழுத்துப் பிழையின்மை - எழுதுவதற்குப் பயிற்சி அளித்தல் - எழுத்துப் பயிற்சி முறைகள்.
அலகு – 4: நிறுத்தற்குறிகள்
கால், அரை, முக்கால், முற்றுப்புள்ளி - புள்ளி - முப்புள்ளி - கேள்விக்குறி - உணர்ச்சிக்குறி - இரட்டை மேற்கோள்குறி - ஒற்றை மேற்கோள்குறி - தனிமேற்கோள்குறி - மேற்படிக்குறி - பிறை அடைப்பு - சதுர அடைப்பு இணைப்புக்கோடு - இணைப்புச் சிறுகோடு - சாய்கோடு- அடிக்கோடு,உடுக்குறி ஆகியன பயன்படுத்தும் இடம், முறைகள்.
அலகு -5: சந்தியமைப்பு
எளிய அணுகுமுறை - பட்டியலைப் பயன்படுத்தும் முறை
முதல் சொல்லின் இறுதி எழுத்து - வரும் சொல்லின் முதல் எழுத்து.
பாட நூல்கள்
1.சொல் வழக்குக் கையேடு - மொழி அறக்கட்டளை ,சென்னை
2.தமிழ் நடைக் கையேடு - அடையாளம்,சென்னை
3.நற்றமிழ் இலக்கணம் -சொ.பரமசிவம்
4.நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் -வி.கணபதி
2. PGDip-TA02 - COMPUTER APPLICATION –PRACTICAL
MS OFFICE
I-MS WORD
1. Type Chairman’s speech/ Auditor’s report / Minutes/ Agenda and perform the following operations:
Bold, Underline, Font Size, style, Background color, Text color, Line
spacing, Spell Check, Alignment, Header & Footer, Inserting pages
and page numbers, Find and Replace.
2. Prepare an invitation for the college function using Text boxes and clip parts.
3. Design an invoice and Account sales by using Drawing tool bar, Clip Art, Word Art, Symbols, Borders and Shading.
4. Prepare a Shareholders meeting letter for 10 members using mail merge
operation.
5. Prepare a Wizard by using Wizard/ Templates.
II-MS EXCEL
1. Prepare a mark list of your class (minimum of 5 subjects) and perform the following operations:
Data Entry, Total, Average, Result and Ranking by using arithmetic
and logical functions and sorting.
2. Draw the different type of charts (Line, Pie, Bar) to illustrate year-wise
Performance of sales, purchase, profit of a company by using chart wizard.
III-MS POWERPOINT
1. Design presentation slides for a product of your choice. The slides must include name, brand name, type of product, characteristics, special features, price,Special offer etc. Add voice if possible to explain the features of the product. The presentation should work in manual mode.
2. Design slides for the headlines News of a popular TV Channel. The Presentation Should contain the following transactions:
Top down, Bottom up, Zoom in and Zoom out.
The presentation should work in custom mode.
IV-MS ACCESS
1. Prepare a payroll for employee database of an organization with the following Details:
Employee id, Employee name, Date of Birth, Department and
Designation, Date of appointment, Basic pay, Dearness Allowance,
House Rent Allowance and other deductions if any. Perform queries for different categories.
2. Create mailing labels for student database which should include atleast three Table must have atleast two fields with the following details:
Roll Number, Name, Course, Year, College Name, University,
Address, Phone Number.
3. PGDip-TA03 – இதழியல்
நோக்கம்
மக்கள் தொடர்புச் சாதனங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலும் இதழியலை ஆழ்ந்து கற்றலும்.
அலகு-1: மக்கள் தொடர்புச் சாதனங்கள்-அறிமுகம்
இதழ்களின் வரலாறு,ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, பக்கிங்காம், இராஜாராம் மோகன்ராய் ஆகியோரின் இதழியல் பணிகள், இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்.
அலகு-2:இதழியல் சட்டங்கள்
இதழ்ச்சட்டங்கள்–மானநஷ்டம்,நீதிமன்றஅவமதிப்பு,சட்டமன்ற அவமதிப்பு, குழந்தைகள் சட்டம் , பதிப்புரிமைச் சட்டம், இதழ்களின் பதிவுச் சட்டம்.
அலகு-3:நிருபர்
நிருபர்-தகுதிகள்-கடமைகள்-சமூகப் பொறுப்புகள்-செய்தி சேகரிப்பதில் ஏற்படும் இடர்ப்பாடுகள். செய்தி நிறுவனங்கள்வழி வரும் செய்திகளைத் தொகுத்தல்.
அலகு-4:ஆசிரியர் குழு
ஆசிரியர் குழுவின் பணிப்பிரிவுகளும் செயற்பாடுகளும்
1. தலைமையாசிரியர்
2. செய்தி ஆசிரியர்
3. துணை ஆசிரியர்
இதழியல் கலைச்சொற்களும் பதிப்புக் குறியீடுகளும், அச்சுப் பிரதியைத்
திருத்துதலும் (Proof Correction).
அலகு-5:செய்தி வகைகள்
செய்தி வகைகள் ,செய்தித் தலைப்புகள் - தலைப்புகளின் வகைகள் - செய்தி முன்னுரை -முன்னுரை வகைகள்., செய்தி தெரிவிப்பதில் படங்கள் பெறும் இடம் - நிழற்படம் - கருத்துப் படம். கேலிச்சித்திரம் சுருக்கமாக. பக்க அமைப்பும், அதன் வகைகளும் , முதல் பக்கமும், பிறபக்கங்களும் (பக்க அளவில் விளம்பரம் சுருக்கமாக)
செய்முறைப் பயிற்சி :
1. அச்சுப் பிரதியைச் சரிபார்த்தல்
2. பல்வகைச் செய்திகளை எழுதுதலில் பயிற்சி தருதல்
3. தலையங்கம் எழுதுதல்
4. பேட்டி கண்டு எழுதுதல்
5. மாதிரித்தாள் தயாரித்தல்
6. பதிப்புக் குறியீடுகள் தருதல்
7. தமிழ்த்தாளின் பக்க அமைப்பை ஒப்பிடல்
8. முன்னுரை வகைகளை இனங்காணல்
9.தமிழ்தாள்களில் முதன்மை பெறும் தலைப்பு வகைகளைக் கண்டறிதல்:செய்தித் தலைப்புகளைத் தாள்தோறும் ஒப்பிடல்.
பாட நூல்கள்
1. இதழியல் - இரா. கோதண்டபாணி
2. இந்திய இதழ்கள் - பா.ரா. இளங்கோவன்
4.PGDip-TA04 – படைப்புக்கலை
நோக்கம்
தமிழின் நவீன இலக்கியங்களான சிறுகதை,கவிதை,நாடகம்,உரைநடை மற்றும் வருணனை நிகழ்த்துதல் போன்றவற்றில் புலமை பெறச்செய்தல்.
அலகு -1: சிறுகதை எழுதுதல்
சிறுகதையின் இலக்கணம் அறிந்து கொடுக்கப்படும் சமுதாயச் சிக்கலை
அடிப்படையாகக் கொண்டு ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் எழுதப் பயிலுதல்.
அலகு -2: மரபு மற்றும் புதுக்கவிதை எழுதுதல்
கொடுக்கப்படும் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு மரபு மற்றும்
புதுக்கவிதை ஒன்றினை இருபது அடிகளுக்கு மிகாமல் எழுதப் பயிலுதல்.
அலகு -3 ஒரங்க நாடகம் எழுதுதல்
வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது திரைப்படத்திற்கு -
வழங்கப்படும் சூழலைச் சிந்தனையில் கொண்டு ஐந்து காட்சிகளுக்கு மிகாமல்
ஒரங்கநாடகம் எழுதப் பயிலுதல்.
அலகு -4:நேர்முக வருணனை எழுதுதல்
கோயில் திருவிழா - கலை இலக்கியம் - பண்பாட்டு நோக்கு விழா -
விளையாட்டுகள் ஆகியன பற்றிய நேர்முக வருணனையை வானொலி
தொலைக்காட்சி, ஆகியவற்றிற்கு ஏற்றாற்போன்று எழுதப் பயிலுதல்.
அலகு-5:உரைநடைக் கட்டுரை எழுதுதல்
அறிவியல், உளவியல், சமூகவியல் கல்வியியல், பொருளியல் – தகவல்களை மனதில்கொண்டு ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதப் பயிலுதல்.
பாட நூல்கள்
1. அரிஸ்டாட்டிலின் கவிதையியல் ( மொழி பெயர்ப்பு-அ.அ.மணவாளன்)
2.யாப்பதிகாரம் –புலவர் குழந்தை
3.இலக்கிய மரபு- மு.வ.
4.இலக்கியத்திறன் – மு.வ.
5.PGDip-TA05 – மொழிபெயர்ப்பியல்
நோக்கம்
ெ மொழிபெயர்ப்பு இன்று வளர்ந்து வரும் ஒரு கலை. இது ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளுடன் தொடர்புடையது.ஒரு மொழியிலுள்ள கருத்தை அல்லது தகவலை இன்னொரு மொழியில் மாற்றித் தருவதே மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்புக் கலையின் வரலாறு, அதன் வளர்ச்சி, மொழிபெயர்ப்புக் கொள்கைகள், வகைகள், அதில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றுடன் தகவல் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பு முறைகளும் விரிவாக இதில் விளக்கப்படுகின்றன.மேலும், இப்பாடத்தில் செயல்முறைப் பயிற்சிகளும் இடம்பெறுகின்றன.
அலகு-1:மொழிபெயர்ப்பு-அறிமுகம்
மொழிபெயர்ப்பு - தோற்றமும் வளர்ச்சியும்
மொழிபெயர்ப்பு-பொருள் வரையறை
மொழிபெயர்ப்புக் கலையாக்கம்
மொழிப்பெயர்ப்பு முறை
பிற்கால மொழிபெயர்ப்பு நிலைகள்
தமிழில் மொழிபெயர்ப்பு
அலகு-2: மொழிபெயர்ப்பின் தன்மை
மொழிபெயர்ப்பாளர்
மொழிபெயர்ப்பின் சிறப்புக் கூறு
மூலமொழிபெயர்ப்பும் சரிபார்த்தலும்
மொழிபெயர்ப்புப் பணி
மொழிபெயர்ப்பில் தவிர்க்கப்பட வேண்டியவை
அலகு-3: மொழிபெயர்ப்பின் வகைகள்
மொழிபெயர்ப்பு வகைகள்-விளக்கம்
சொல்லுக்குச் சொல் பெயர்த்தல்
விரிவான மொழிபெயர்ப்பு
முழுமையான அல்லது சரியான மொழிபெயர்ப்பு
சுருக்கமான மொழிபெயர்ப்பு
தழுவல்
மொழியாக்கம்
சமய நூல்கள்
பைபிள் மொழிபெயர்ப்பு
காப்பிய மொழிபெயர்ப்பும் புராண மொழிபெயர்ப்பும்
பகவத்கீதை மொழிபெயர்ப்பு
குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு
அறிவியல் மொழிபெயர்ப்பு
மேடைப்பேச்சு மொழிபெயர்ப்பு
மரபுவழி மொழிபெயர்ப்பு
அலகு -4 : மொழிபெயர்ப்புக் கொள்கைகள்
மொழிபெயர்ப்பு முரண்பாடுகளை தவிர்த்தல்
எளிமை,தெளிவு,விளக்கங்கள்
மொழிபெயர்ப்பாளர் கடமை
மொழிபெயர்ப்பின் தன்மை
மொழிபெயர்ப்பில் பொருளும் நடையும்
மூலமும் மொழிபெயர்ப்பும்
மொழிபெயர்ப்புக் கொள்கையாளர்கள்
அலகு – 5 : மொழிபெயர்ப்பில் இடர்பாடுகள்
மொழிபெயர்ப்பில் இடர்பாடுகள்-இலக்கிய மொழிபெயர்ப்பு
அறிவியல் மொழிபெயர்ப்பு
சட்டத்துறை மொழிபெயர்ப்பு
பிறவகை மொழிபெயர்ப்பு
விளம்பர வகை மொழிபெயர்ப்பு
மக்கள் தொடர்புச் சாதன மொழிபெயர்ப்பு
தொழில் நுட்பத்துறை மொழிபெயர்ப்பு
மேடைப் பேச்சு மொழிபெயர்ப்பு
பாடநூல்:
1.மொழிபெயர்ப்பியல் - முனைவர் ச. ஈஸ்வரன்
2.மொழிபெயர்ப்புக்கலை – மு.வளர்மதி
Your request is in progress, please wait.