BHARATHIAR UNIVERSITY: COIMBATORE – 641 046 ,INDIA

SCHOOL OF DISTANCE EDUCATION (SDE)

 Diploma in Applied Tamil

(NON LAB ORIENTED COURSE WITHOUT PRACTICALS AND PROJECT)

ANNUAL PATTERN (2011 – 2012)

 காலம் - 1 வருடம்

 Entry Level Qualifications -  (i) 10+2  or (ii) AS or (iii) A Level  or (iv) OCR Asset                                                                       Languages  Advanced Level Pass.

Paper

Paper - I   - Dip-TA01- தமிழ்மொழித்திறன் வளர்த்தல்

Paper - II -  Dip-TA02 - INTRODUCTION TO INFORMATION TECHNOLOGY

Paper - III -Dip-TA 03- இதழியல்

Paper - IV -Dip-TA04 - படைப்புக்கலை

 

SYLLABUS

 

1.Dip-TA01- தமிழ்மொழித்திறன் வளர்த்தல்

நோக்கம்

 

        மொழித்திறன்  என்பது மொழியை முறையாக ஒலித்தல், அதிலுள்ள சொற்களை எடுத்தாளுதல்,சொற்களால் ஆன வாக்கியங்கள்வழித் தகவல்களைச் செறிவாக வெளிப்படுத்துதல் ஆகியனவற்றைக் குறிக்கும். இவற்றை மையமாகக் கொண்டு பயன்பாட்டு முறையில் தமிழ் மொழித்திறனை வளர்த்துக் கொள்ளுவதற்கு ஏதுவாக இந்தத் தாள் அமைக்கப்பட்டுள்ளது.

 

அலகு -1: கேட்டல் 

 

        கேட்டல் வரையறை - கேட்டலின்வழிக் கற்றல் - கேட்டல் பழக்கத்தினை வளர்த்தல் - பாடல் பகுதிகளைப் படித்துச் சிறு வினாக்களின் வாயிலாக வளர்த்தல் - வானொலி கேட்டல் - பொருள் மாறாது சுருக்கி எழுதுதல் - பத்திகளையும் பெரிய  பகுதிகளையும் சுருக்குதல் - பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிப் படித்தல் - செய்திகளை அறிதல் - நயம் பாராட்டல் - விளம்பரம் - கேட்டலுக்கும் பயிற்றலுக்குமுள்ள வேறுபாடுகள்.

 

 அலகு 2. பேசுதலும் வாய்மொழிப் பயிற்சியும்

 

 அழுத்தந்திருத்தமாகப் பேசுதல் - இலக்கண வழுவின்றிப் பேசுதல் – மரபு மொழி-பழமொழிகள்- தொடக்க நிலையில் பேச்சாற்றல் - சொற்போர் - கலந்துரையாடல் - வினாடி வினா, வாய்மொழிப் பயிற்சியின் இன்றியமையாமை - நோக்கங்கள்- பயன்கள்- உச்சரிப்பில் ஏற்படும் சிக்கல்கள் - மனப்பாடம் – கலந்துரையாடல்,சொற்போர்.சொற்பொழிவுகள், மன்றத்தில் பேசுதல்.

 

 

 

 

 அலகு – 3: படித்தல், எழுதுதல்

 

படிக்கக் கற்பித்தலின் நோக்கங்கள் - படிக்கக் கற்பிக்கும் முறைகள், எழுத்துமுறைப் படிப்பு - சொல்முறைப் படிப்பு - களஞ்சியப் பெருக்கம் - படிப்பில் ஆர்வத்தைத் தூண்டல்- வாய்விட்டுப் படித்தல்    - நன்மை, தீமைகள்- நூல்களைப் பயன்படுத்துதல் - நூலகப்படிப்பு- தின, வார,மாத இதழ்கள் படிக்கும் முறைகள் போன்றன - ஆழ்ந்த படிப்பு - அகன்ற படிப்பு நோக்கங்கள் – நிறை, குறைகள் - முதியோர்க்குப் படிக்கக் கற்பித்தல் - செயல்படு எழுத்தறிவு – நாட்டுப்புறக்கல்வி , கையொப்பம் - எழுத்துப் பிழையின்மை - எழுதுவதற்குப் பயிற்சி அளித்தல் - எழுத்துப் பயிற்சி முறைகள்.

 

 அலகு – 4: நிறுத்தற்குறிகள்

 

 கால், அரை, முக்கால், முற்றுப்புள்ளி - புள்ளி - முப்புள்ளி - கேள்விக்குறி - உணர்ச்சிக்குறி - இரட்டை மேற்கோள்குறி - ஒற்றை மேற்கோள்குறி - தனிமேற்கோள்குறி - மேற்படிக்குறி - பிறை அடைப்பு - சதுர அடைப்பு இணைப்புக்கோடு - இணைப்புச் சிறுகோடு - சாய்கோடு- அடிக்கோடு,உடுக்குறி ஆகியன பயன்படுத்தும் இடம், முறைகள்.

 

அலகு -5: சந்தியமைப்பு

 

எளிய அணுகுமுறை - பட்டியலைப் பயன்படுத்தும் முறை

முதல் சொல்லின் இறுதி எழுத்து - வரும் சொல்லின் முதல் எழுத்து.

 

 பாட நூல்கள்

 

1.சொல் வழக்குக் கையேடு        - மொழி அறக்கட்டளை ,சென்னை

2.தமிழ் நடைக் கையேடு           - அடையாளம்,சென்னை

3.நற்றமிழ் இலக்கணம்             -சொ.பரமசிவம்

4.நற்றமிழ் கற்பிக்கும் முறைகள்  -வி.கணபதி

 

2. Dip-TA02 - INTRODUCTION TO INFORMATION TECHNOLOGY

 

Objectives: After the successful completion of the course the students should have

knowledge about concepts and principles of IT.

 

CONTENTS

I. Hardware and Software

Computer systems - importance of computers in

Business- Data and Information- Data Processing, Data Storage and Data

retrieval capabilities - Computer applications in various areas of business-

Computer- related jobs in business.

 

II .Types of Computer systems

 Micro, Mini, Mainframe and Super Computers. Analog, Digital and Hybrid Computers - Business and Scientific Computer systems - First, second, third and fourth generation Computers, Laptop or notebook Computers - Data Processing Systems- Batch, Online and  Real time system - Time sharing , Multiprogramming and Multiprocessing

systems - Networking: Local and Wide Area Network.

 

III. Components of Computers

 Input ,Output and Storage Devices - Software:System Software and Application Software; Programming Language-Machine Language- Assembly Language, Higher Level Languages. Flow Chart and Programme Flow Chart - Steps in developing a Computer programme.

 

IV. Operating Systems

DOS, Windows, UNIX, Windows NT, Windows98 – E.Commerce. Internet- Extranet- E.mail and its uses - World Wide Websites- Mobile Computers.

 

V. System Analysis and Design

Computer - based Information System-Transaction

Processing - Office Automation-Management Information System-Decision

Support Systems - Expert System

 

Books for Reference

 

1. Computer and Common Sense-Roger Hunt and John Shellery

2. Using Micro Computers- Brightman and Dimsdale

3. P.C.Software Made Simple-R.K.Taxali

4. Introduction to Computers-Alexis Leon and Mathews Leon

5. Information Technology for Management-Henry C.Lucas

 

3. Dip-TA03 – இதழியல்

நோக்கம்

        மக்கள் தொடர்புச் சாதனங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலும் இதழியலை ஆழ்ந்து கற்றலும்.

 

அலகு-1: மக்கள் தொடர்புச் சாதனங்கள்-அறிமுகம்

 

 இதழ்களின் வரலாறு,ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, பக்கிங்காம், இராஜாராம் மோகன்ராய் ஆகியோரின் இதழியல் பணிகள், இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்.

 

அலகு-2:இதழியல் சட்டங்கள்

 

 இதழ்ச்சட்டங்கள்மானநஷ்டம்,நீதிமன்றஅவமதிப்பு,சட்டமன்ற அவமதிப்பு, குழந்தைகள் சட்டம் , பதிப்புரிமைச் சட்டம், இதழ்களின் பதிவுச் சட்டம்.

 

அலகு-3:நிருபர்

 

 நிருபர்-தகுதிகள்-கடமைகள்-சமூகப் பொறுப்புகள்-செய்தி சேகரிப்பதில் ஏற்படும் இடர்ப்பாடுகள். செய்தி நிறுவனங்ள்வழி வரும் செய்திகளைத் தொகுத்தல்.

 

 

 

அலகு-4:ஆசிரியர் குழு

 

 ஆசிரியர் குழுவின் பணிப்பிரிவுகளும் செயற்பாடுகளும்

1. தலைமையாசிரியர்

2. செய்தி ஆசிரியர்

3. துணை ஆசிரியர்

 இதழியல் கலைச்சொற்களும் பதிப்புக் குறியீடுகளும், அச்சுப் பிரதியைத்

திருத்துதலும் (Proof Correction).

 

அலகு-5:செய்தி  வகைகள்

 

செய்தி வகைகள் ,செய்தித் தலைப்புகள் - தலைப்புகளின் வகைகள் - செய்தி முன்னுரை -முன்னுரை வகைகள்., செய்தி தெரிவிப்பதில் படங்கள் பெறும் இடம் - நிழற்படம் - கருத்துப் படம். கேலிச்சித்திரம் சுருக்கமாக. பக்க அமைப்பும், அதன் வகைகளும் , முதல் பக்கமும், பிறபக்கங்களும் (பக்க அளவில் விளம்பரம் சுருக்கமாக)

 

செய்முறைப் பயிற்சி :

 

1. அச்சுப் பிரதியைச் சரிபார்த்தல்

2. பல்வகைச் செய்திகளை எழுதுதலில் பயிற்சி தருதல்

3. தலையங்கம் எழுதுதல்

4. பேட்டி கண்டு எழுதுதல்

5. மாதிரித்தாள் தயாரித்தல்

6. பதிப்புக் குறியீடுகள் தருதல்

7. தமிழ்த்தாளின் பக்க அமைப்பை ஒப்பிடல்

8. முன்னுரை வகைகளை இனங்காணல்

9.தமிழ்தாள்களில் முதன்மை பெறும் தலைப்பு வகைகளைக் கண்டறிதல்:செய்தித் தலைப்புகளைத் தாள்தோறும் ஒப்பிடல்.

 

பா நூல்கள்

 

1. இதழியல் - இரா. கோதண்டபாணி

2. இந்திய இதழ்கள் - பா.ரா. இளங்கோவன்

 

4.Dip-TA04 படைப்புக்கலை

நோக்கம்

   தமிழின் நவீன இலக்கியங்களான சிறுகதை,கவிதை,நாடகம்,உரைநடை மற்றும் வருணனை நிகழ்த்துதல் போன்றவற்றில் புலமை பெறச்செய்தல்.

 

அலகு   -1: சிறுகதை எழுதுதல்

 

சிறுகதையின் இலக்கணம் அறிந்து கொடுக்கப்படும் சமுதாயச் சிக்கலை

அடிப்படையாகக் கொண்டு ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் எழுதப் பயிலுதல்.

 

அலகு -2: மரபு மற்றும் புதுக்கவிதை எழுதுதல்

 

கொடுக்கப்படும் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு மரபு மற்றும்

புதுக்கவிதை ஒன்றினை இருபது அடிகளுக்கு மிகாமல் எழுதப் பயிலுதல்.

அலகு -3 ஒரங்க நாடகம் எழுதுதல்

 

வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது திரைப்படத்திற்கு -

வழங்கப்படும் சூழலைச் சிந்தனையில் கொண்டு ஐந்து காட்சிகளுக்கு மிகாமல்

ஒரங்கநாடகம் எழுதப் பயிலுதல்.

 

 

அலகு -4:நேர்முக வருணனை எழுதுதல்

 

கோயில் திருவிழா - கலை இலக்கியம் - பண்பாட்டு நோக்கு விழா -

விளையாட்டுகள் ஆகியன பற்றிய நேர்முக வருணனையை வானொலி

தொலைக்காட்சி, ஆகியவற்றிற்கு ஏற்றாற்போன்று எழுதப் பயிலுதல்.

 

அலகு-5:உரைநடைக் கட்டுரை எழுதுதல்

 

அறிவியல், உளவியல், சமூகவியல்  கல்வியியல், பொருளியல் தகவல்களை  மனதில்கொண்டு ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதப் பயிலுதல்.

 

பாட நூல்கள்

 

1. அரிஸ்டாட்டிலின்  கவிதையியல் ( மொழி பெயர்ப்பு-அ.அ.மணவாளன்)

 

2.யாப்பதிகாரம் புலவர் குழந்தை

 

3.இலக்கிய மரபு- மு.வ.

 

4.இலக்கியத்திறன் மு.வ.

===============================================================

Your request is in progress, please wait.