BHARATHIAR UNIVERSITY: COIMBATORE - 641 046, INDIA
SCHOOL OF DISTANCE EDUCATION (SDE)
B.A. Applied Tamil
(ANNUAL PATTERN COURSE WITH OUT PRACTICALS)
(Effective from the Academic Year 2011-2012 and thereafter)
------------------------------------------------------------------------------
UG course - Duration - 3 years – Non semester pattern
Entry Level Qualifications - (i) 10+2 or (ii) AS or (iii) A Level or (iv) OCR Asset Languages Advanced Level Pass.
Name of the course
B.A. Applied Tamil பி.ஏ.நடைமுறைத்தமிழ்
FIRST YEAR முதலாமாண்டு
|
Code |
Name of the Paper |
Year |
Max.Marks |
Passing Minimum |
|
1.TAM01 |
நடைமுறைத் தமிழ் – I
|
I |
100 |
40 |
|
2.TAM02 |
தமிழிலக்கிய வரலாறு -I
|
I |
100 |
40 |
|
3.TAM03 |
மொழிபெயர்ப்பியல் |
I |
100 |
40 |
|
4.TAM04 |
INTRODUCTION TO INFORMATION TECHNOLOGY
|
I |
100 |
40 |
|
5.TAM05 |
தமிழ்மொழித்திறன் வளர்த்தல்-I
|
I |
100 |
40 |
|
SECOND YEAR இரண்டாமாண்டு
|
||||
|
6.TAM06 |
நடைமுறைத்தமிழ்-II |
II |
100 |
40 |
|
7.TAM07 |
இலக்கணம் எழுத்தும் சொல்லும் |
II |
100 |
40 |
|
8.TAM08 |
தமிழ்மொழித்திறன் வளர்த்தல்-II
|
II |
100 |
40 |
|
9.TAM09 |
தமிழிலக்கிய வரலாறு -II
|
II |
100 |
40 |
|
10.TAM10 |
COMPUTER APPLICATION –PRACTICAL
|
II |
100 |
40 |
|
THIRD YEAR மூன்றாமாண்டு
|
||||
|
11.TAM11 |
இலக்கணம்-யாப்பும்அணியும் |
III |
100 |
40 |
|
12.TAM12 |
இதழியல்
|
III |
100 |
40 |
|
13.TAM13 |
சுற்றுலாவியல்
|
III |
100 |
40 |
|
14.TAM14 |
படைப்புக்கலை
|
III |
100 |
40 |
|
15.TAM15 |
சங்கச் செவ்வியல் இலக்கியம் |
III |
100 |
40 |
1. TAM01 - நடைமுறைத் தமிழ் – I
நோக்கம்
மொழிப்பாடத்தில் பாடப்பொருளைவிட மொழித்திறன்களே சிறப்பிடத்தைப் பெறுகின்றன. கேட்டல்,பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்களை விளக்கப் பாடப்பொருள் தேவை. அப்பாடப் பொருளை அடிப்படையாகக் கொண்டே மொழித்திறன்கள் வளர்க்கப் பெறுகின்றன. இத்திறன்களை வளர்க்க செய்யுள், உரைநடை, இலக்கணம் ஆகிய பாடங்கள் பாடநூலில் இடம் பெறுகின்றன.
அலகு- 1 : செய்யுள்
அ. முரசு - பாரதியார்
ஆ. வரிப்புலியே தமிழ் காக்க
எழுந்திரு - பாரதிதாசன்
இ. எல்லாம் நானே - கண்ணதாசன்
ஈ. மரங்கள் - மு.மேத்தா
கருதுகோள் : பொருள் அறிதல், உரைநடைப்படுத்துதல், நயம் பாராட்டுதல்
அலகு - 2: உரைநடை
ஏ தாழ்ந்த தமிழகமே - அறிஞர் அண்ணா
கருதுகோள்: உரைநடையாசிரியர்களின் நூல்களைப் படித்துப் பொருளுணர்வதுடன் அவர்களின் நடைச் சிறப்பையும் சொற்களஞ்சியத்தையும் அறிந்து போற்றும் திறன் பெறுதல்.
அலகு - 3: படைப்பாற்றல்
அ. பேச்சாற்றல்
ஆ. கவிதை எழுதுதல்
இ. கதை எழுதுதல்
ஈ. தன்வரலாறு எழுதுதல்
கருதுகோள் : மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் அமைத்தல்.
அலகு - 4 :இலக்கணம் - எழுத்தின் பிறப்பு
அ. எழுத்துக்களின் பிறப்பு - பொது அறிமுகம்
ஆ. உயிரெழுத்துக்களின் பிறப்பு
இ. மெய்யெழுத்துகளின் பிறப்பு
கருதுகோள் : மொழிக்கு அடிப்படையான எழுத்துக்களின் பிறப்பு பற்றியும்,சொல் உருவாக்கம் பற்றியும் அறிந்து கொள்ளுதல்.
அலகு - 5 : செய்யுள் கற்பிக்கும் முறைகள்
செய்யுள் கற்பித்தலின் நோக்கம், ஓசைநயம், ஒலிநயம், எதுகை நயம், மோனைநயம்,பொருள் சுவை,சொற் சுவை, உவமை நயம், சிலேடை நயம், கற்பனை, கருத்துணர்த்தல்.
கருதுகோள் : மொழிப்பாடம் கற்பிக்கும் நுட்பங்களைக் கற்றல்.
2. TAM02 - தமிழிலக்கிய வரலாறு – I
தொன்மைக்காலம் முதல் பல்லவர் காலம் வரை ( கி.பி.850)
நோக்கம்
தமிழ் கற்கத் தொடங்கும் மாணாக்கர்கள் ,முதலில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது இன்றியமையாதது.தொன்மைக்காலத் தமிழில் எழுதப்பட்ட இலக்கிய ,இலக்கணங்கள் அமைந்திருந்த நிலையை அறிந்து கொள்வது இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.
அலகு -1 : சங்க காலம்
சங்க காலம் – சங்கம் நிலவியமைக்குச் சான்றுகள் – முச்சங்க வரலாறு – அகத்தியம் – தொல்காப்பியம் – சங்க காலம் ஒரு பொற்காலம்.
அலகு – 2 : பாட்டும் தொகையும்
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் – அமைப்பு – அகம், புறம் மற்றும் அகப்புற நூல்கள்
அலகு – 3 : கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் – அறம்,அகம்,புறம் மற்றும் மருத்துவ நூல்கள்
அலகு – 4 : காப்பியங்கள்
ஐம்பெருங்காப்பியங்கள் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் – இரட்டைக்காப்பியங்கள்
அலகு – 5 : பக்தி இயக்க காலம்
சைவத்திருமுறைகள் – நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பாட நூல்கள் :
1.தமிழ் இலக்கிய வரலாறு – மு.வ.
2. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
3. TAM03- மொழிபெயர்ப்பியல்
நோக்கம்
ெ மொழிபெயர்ப்பு இன்று வளர்ந்து வரும் ஒரு கலை. இது ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளுடன் தொடர்புடையது.ஒரு மொழியிலுள்ள கருத்தை அல்லது தகவலை இன்னொரு மொழியில் மாற்றித் தருவதே மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்புக் கலையின் வரலாறு, அதன் வளர்ச்சி, மொழிபெயர்ப்புக் கொள்கைகள், வகைகள், அதில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றுடன் தகவல் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பு முறைகளும் விரிவாக இதில் விளக்கப்படுகின்றன.மேலும், இப்பாடத்தில் செயல்முறைப் பயிற்சிகளும் இடம்பெறுகின்றன.
அலகு-1:மொழிபெயர்ப்பு-அறிமுகம்
மொழிபெயர்ப்பு - தோற்றமும் வளர்ச்சியும்
மொழிபெயர்ப்பு-பொருள் வரையறை
மொழிபெயர்ப்புக் கலையாக்கம்
மொழிப்பெயர்ப்பு முறை
பிற்கால மொழிபெயர்ப்பு நிலைகள்
தமிழில் மொழிபெயர்ப்பு
அலகு-2: மொழிபெயர்ப்பின் தன்மை
மொழிபெயர்ப்பாளர்
மொழிபெயர்ப்பின் சிறப்புக் கூறு
மூலமொழிபெயர்ப்பும் சரிபார்த்தலும்
மொழிபெயர்ப்புப் பணி
மொழிபெயர்ப்பில் தவிர்க்கப்பட வேண்டியவை
அலகு-3: மொழிபெயர்ப்பின் வகைகள்
மொழிபெயர்ப்பு வகைகள்-விளக்கம்
சொல்லுக்குச் சொல் பெயர்த்தல்
விரிவான மொழிபெயர்ப்பு
முழுமையான அல்லது சரியான மொழிபெயர்ப்பு
சுருக்கமான மொழிபெயர்ப்பு
தழுவல்
மொழியாக்கம்
சமய நூல்கள்
பைபிள் மொழிபெயர்ப்பு
காப்பிய மொழிபெயர்ப்பும் புராண மொழிபெயர்ப்பும்
பகவத்கீதை மொழிபெயர்ப்பு
குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு
அறிவியல் மொழிபெயர்ப்பு
மேடைப்பேச்சு மொழிபெயர்ப்பு
மரபுவழி மொழிபெயர்ப்பு
அலகு -4 : மொழிபெயர்ப்புக் கொள்கைகள்
மொழிபெயர்ப்பு முரண்பாடுகளை தவிர்த்தல்
எளிமை,தெளிவு,விளக்கங்கள்
மொழிபெயர்ப்பாளர் கடமை
மொழிபெயர்ப்பின் தன்மை
மொழிபெயர்ப்பில் பொருளும் நடையும்
மூலமும் மொழிபெயர்ப்பும்
மொழிபெயர்ப்புக் கொள்கையாளர்கள்
அலகு – 5 : மொழிபெயர்ப்பில் இடர்பாடுகள்
மொழிபெயர்ப்பில் இடர்பாடுகள்-இலக்கிய மொழிபெயர்ப்பு
அறிவியல் மொழிபெயர்ப்பு
சட்டத்துறை மொழிபெயர்ப்பு
பிறவகை மொழிபெயர்ப்பு
விளம்பர வகை மொழிபெயர்ப்பு
மக்கள் தொடர்புச் சாதன மொழிபெயர்ப்பு
தொழில் நுட்பத்துறை மொழிபெயர்ப்பு
மேடைப் பேச்சு மொழிபெயர்ப்பு
பாடநூல்:
1.மொழிபெயர்ப்பியல் - முனைவர் ச. ஈஸ்வரன்
2.மொழிபெயர்ப்புக்கலை – மு.வளர்மதி
4. TAM04 - INTRODUCTION TO INFORMATION TECHNOLOGY
(B.COM (CA)- 2007-08 – SDE/ B.COM CA-SEMESTER I)
Objectives: After the successful completion of the course the students should have
knowledge about concepts and principles of IT.
CONTENTS
I. Hardware and Software
Computer systems - importance of computers in
Business- Data and Information- Data Processing, Data Storage and Data
retrieval capabilities - Computer applications in various areas of business-
Computer- related jobs in business.
II .Types of Computer systems
Micro, Mini, Mainframe and Super Computers. Analog, Digital and Hybrid Computers - Business and Scientific Computer systems - First, second, third and fourth generation Computers, Laptop or notebook Computers - Data Processing Systems- Batch, Online and
Real time system - Time sharing , Multiprogramming and Multiprocessing
systems - Networking: Local and Wide Area Network.
III. Components of Computers
Input ,Output and Storage Devices - Software:System Software and Application Software; Programming Language-Machine Language- Assembly Language, Higher Level Languages. Flow Chart and Programme Flow Chart - Steps in developing a Computer programme.
IV. Operating Systems
DOS, Windows, UNIX, Windows NT, Windows98 – E.Commerce. Internet- Extranet- E.mail and its uses - World Wide Websites- Mobile Computers.
V. System Analysis and Design
Computer - based Information System-Transaction
Processing - Office Automation-Management Information System-Decision
Support Systems - Expert System
Books for Reference
1. Computer and Common Sense-Roger Hunt and John Shellery
2. Using Micro Computers- Brightman and Dimsdale
3. P.C.Software Made Simple-R.K.Taxali
4. Introduction to Computers-Alexis Leon and Mathews Leon
5. Information Technology for Management-Henry C.Lucas
5.TAM05- தமிழ்மொழித்திறன் வளர்த்தல்-I
நோக்கம்
மொழித்திறன் என்பது மொழியை முறையாக ஒலித்தல், அதிலுள்ள சொற்களை எடுத்தாளுதல்,சொற்களால் ஆன வாக்கியங்கள்வழித் தகவல்களைச் செறிவாக வெளிப்படுத்துதல் ஆகியனவற்றைக் குறிக்கும். இவற்றை மையமாகக் கொண்டு பயன்பாட்டு முறையில் தமிழ் மொழித்திறனை வளர்த்துக் கொள்ளுவதற்கு ஏதுவாக இந்தத் தாள் அமைக்கப்பட்டுள்ளது.
அலகு -1: கேட்டல்
கேட்டல் வரையறை - கேட்டலின்வழிக் கற்றல் - கேட்டல் பழக்கத்தினை வளர்த்தல் - பாடல் பகுதிகளைப் படித்துச் சிறு வினாக்களின் வாயிலாக வளர்த்தல் - வானொலி கேட்டல் - பொருள் மாறாது சுருக்கி எழுதுதல் - பத்திகளையும் பெரிய பகுதிகளையும் சுருக்குதல் - பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிப் படித்தல் - செய்திகளை அறிதல் - நயம் பாராட்டல் - விளம்பரம் - பயிற்றலுக்கும் / பேசுதலுக்குமுள்ள வேறுபாடுகள்.
அலகு 2. பேசுதலும் வாய்மொழிப் பயிற்சியும்
அழுத்தந்திருத்தமாகப் பேசுதல் - இலக்கண வழுவின்றிப் பேசுதல் – மரபு மொழி-பழமொழிகள்- தொடக்க நிலையில் பேச்சாற்றல் - சொற்போர் - கலந்துரையாடல் - வினாடி வினா, வாய்மொழிப் பயிற்சியின் இன்றியமையாமை - நோக்கங்கள்- பயன்கள்- உச்சரிப்பில் ஏற்படும் சிக்கல்கள் - மனப்பாடம் – கலந்துரையாடல்,சொற்போர்.சொற்பொழிவுகள், மன்றத்தில் பேசுதல்.
அலகு – 3: படித்தல், எழுதுதல்
படிக்கக் கற்பித்தலின் நோக்கங்கள் - படிக்கக் கற்பிக்கும் முறைகள், எழுத்துமுறைப் படிப்பு - சொல்முறைப் படிப்பு - களஞ்சியப் பெருக்கம் - படிப்பில் ஆர்வத்தைத் தூண்டல்- வாய்விட்டுப் படித்தல் - நன்மை, தீமைகள்- நூல்களைப் பயன்படுத்துதல் - நூலகப்படிப்பு- தின, வார,மாத இதழ்கள் படிக்கும் முறைகள் போன்றன - ஆழ்ந்த படிப்பு - அகன்ற படிப்பு நோக்கங்கள் – நிறை, குறைகள் - முதியோர்க்குப் படிக்கக் கற்பித்தல் - செயல்படு எழுத்தறிவு – நாட்டுப்புறக்கல்வி , கையொப்பம் - எழுத்துப் பிழையின்மை - எழுதுவதற்குப் பயிற்சி அளித்தல் - எழுத்துப் பயிற்சி முறைகள்.
அலகு – 4: நிறுத்தற்குறிகள்
கால், அரை, முக்கால், முற்றுப்புள்ளி - புள்ளி - முப்புள்ளி - கேள்விக்குறி - உணர்ச்சிக்குறி - இரட்டை மேற்கோள்குறி - ஒற்றை மேற்கோள்குறி - தனிமேற்கோள்குறி - மேற்படிக்குறி - பிறை அடைப்பு - சதுர அடைப்பு இணைப்புக்கோடு - இணைப்புச் சிறுகோடு - சாய்கோடு- அடிக்கோடு,உடுக்குறி ஆகியன பயன்படுத்தும் இடம், முறைகள்.
அலகு -5: சந்தியமைப்பு
எளிய அணுகுமுறை - பட்டியலைப் பயன்படுத்தும் முறை
முதல் சொல்லின் இறுதி எழுத்து - வரும் சொல்லின் முதல் எழுத்து.
பாட நூல்கள்
1.சொல் வழக்குக் கையேடு - மொழி அறக்கட்டளை ,சென்னை
2.தமிழ் நடைக் கையேடு - அடையாளம்,சென்னை
3.நற்றமிழ் இலக்கணம் -சொ.பரமசிவம்
4.நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் -வி.கணபதி
6.TAM06 - நடைமுறைத்தமிழ்- II
நோக்கம் :
மக்களைப் பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்துவது மொழி. தாய்மொழி கருத்துப் பரிமாற்றத்திற்குரிய கருவியாக மட்டுமில்லாமல்,பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகிறது. எனவே ஒருவன் பண்பட்ட மனிதனாக உருவாவதில் மொழிக்கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், பிற பாடங்களைச் சிறப்பாகக் கற்றுக் கொள்வதற்கும் மொழி அடிப்படையாக அமைகிறது. அத்துடன்,மொழிப்பாடம் திறன் பாடம் என்பதால், பிறகருத்துப் பாடங்களாகக் கற்றுக் கொள்வதிலிருந்து வேறுபட்டும் நிற்கிறது. ஆகவே மொழிப்பாடம் கற்றுக் கொள்வதில் கூடுதல் திறன் பெறும் வகையில் இத்தாள் அமைக்கப்பட்டுள்ளது.
அலகு-1:செய்யுள்
அ.திருஞானசம்பந்தர் தேவாரம் - கோளறு பதிகம்
ஆ. குலசேகராழ்வார்-பெருமாள் திருமொழி-நான்காம் திருமொழி-ஊனேறு
இ. மாயூரம் வேதநாயகம் பிள்ளை - திருவருள்மாலை
ஈ. குணங்குடி மஸ்தான் பாடல்கள் - பராபரக்கண்ணி
கருதுகோள் : பொருள் அறிதல், உரைநடைப்படுத்துதல், நயம்பாராட்டுதல்
அலகு-2:கட்டுரை
அறமும் அரசியலும்- மு. வரதராசனார்
கருதுகோள்:கட்டுரை ஆசிரியர்களின் நூல்களைப் படித்துப் பொருளறிவதுடன் அவர்களின் நடைச்சிறப்பையும் சொற்களஞ்சியத்தையும் அறிந்து போற்றுந் திறன் பெறுதல்.
அலகு-3&4:படைப்பாற்றல்
கடிதம் எழுதுதல் - ஆசிரியர் கடிதம் - அலுவலகக் கடிதம் - விளம்பரத் தமிழ் - பதிப்பாசிரியர்- மெய்ப்புத் திருத்தலும் நூலாக்கப்பணியும் – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறல் - ஆவணங்கள் வரைதல்.
கருதுகோள் : மாணவர்களின் திறனை வெளிக்கொணர்ந்து நடைமுறை வாழ்விற்கு ஏற்றவகையில் பயிற்சி அளித்தல்.
பார்வை நூல் - மொழிப் பயன்பாடு - கா. பட்டாபிராமன்.
அலகு-5:இலக்கணம்
சொற்களைச் சேர்த்தும் இடம் விட்டும் எழுதுதல் - நீண்ட சொல் வடிவங்கள் ஒரே சீராக எழுதாத நிலை, இடம் போதாதபோது பிரித்தல்,சில பொதுவான போக்குகள்.
கருதுகோள் : தமிழ்மொழியைக் கையாளும்முறை பற்றி அறிந்துகொள்வது.
7.TAM07- இலக்கணம் – எழுத்தும் சொல்லும்
நோக்கம்
ஒவ்வொரு மொழிக்கும் அடிப்படையாக விளங்குவது இலக்கணமாகும். மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் இலக்கணம் துணைபுரியும். தமிழிலுள்ள மிகப் பழமையான இலக்கணமான தொல்காப்பியத்தையொட்டி எழுந்தது நன்னூலாகும். நன்னூல் எழுத்து,சொல் ஆகிய இரு இலக்கணக் கூறுகளைக் கூறுகிறது. இத்தாளில் எழுத்து,சொல் ஆகிய இலக்கணத்தை அறிமுகப்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.
அலகு – 1: தமிழ் இலக்கண அறிமுகம்
எழுத்து ,சொல் ,பொருள்,யாப்பு,அணி
தமிழ் இலக்கணத்தின் அமைப்பு
அலகு – 2 : எழுத்துகளின் பிறப்பும், பதமும்
எழுத்துகளின் பிறப்பு-பொது அறிமுகம்
உயிரெழுத்துகளின் பிறப்பு
மெய்யெழுத்துகளின் பிறப்பு
மொழி முதல் ,இறுதி எழுத்துகள்
பதம் - பொது அறிமுகம்
பகாப்பதமும் பகுபதமும்
அலகு – 3 :பெயர்ச்சொல்லும்,வினைச்சொல்லும்
பெயர்ச்சொல்லின் பொது இலக்கணம்
திணை,பால்,எண்,இடம்,வேற்றுமை
வினைச்சொல்லின் பொது இலக்கணம்
தன்மை,முன்னிலை ,படர்க்கை வினைமுற்றுகள்
அலகு – 4 : இடைச்சொல்லும்,உரிச்சொல்லும்
இடைச்சொல்லின் பொது இலக்கணம்
இடைச்சொல் வகைகள்
உரிச்சொல்லின் பொது இலக்கணம்
உரிச்சொல் வகைகள்
அலகு – 5 : சொற்றொடரியல்
சொற்றொடர் அறிமுகம்
தொகை நிலைத்தொடர்
தொகா நிலைத்தொடர்
மரபுத்தொடர்
வினா,விடை,பொருள்கோள்
வழு,வழாநிலை,வழுவமைதி
பாடநூல்கள்:
1.நன்னூல் – எழுத்து, சொல்
2.நற்றமிழ் இலக்கணம் - டாக்டர் சொ. பரமசிவம்
8. TAM08 - தமிழ்மொழித்திறன் வளர்த்தல்-II
நோக்கம்
திறன் என்பது மொழியை முறையாக ஒலித்தல், அதிலுள்ள சொற்களை எடுத்தாளுதல், சொற்களால் ஆன வாக்கியங்கள் வழித் தகவல்களைச் செறிவாக வெளிப்படுத்துதல் ஆகியனவற்றைக் குறிக்கும். இவற்றை மையமாகக்கொண்டு பயன்பாட்டு முறையில் தமிழ் மொழித்திறனை வளர்த்துக் கொள்ளுவதற்கு ஏதுவாக இந்தத் தாள் அமைக்கப்பட்டுள்ளது.
அலகு-1:சொல்,பொருள் தேர்வு,எழுத்துப்பெயர்ப்பு
பொருளில் கவனம்
சொல் தேர்வில் கவனிக்க வேண்டியவை
இலக்கணத்தில் கவனம்
உருபுகளும் இடைச்சொற்களும்
எழுத்துப்பெயர்ப்பின் விளக்கம், தேவை முதலியன.
அலகு-2:வாக்கிய வகைகளும் அமைக்கும் முறைகளும்
எழுத்தும் சொல்லும் -வாக்கியத்திற்குக் கருவிகள் - வாக்கிய வரலாறு - வாக்கியம் என்றால் என்ன?வாக்கிய வகைகள் –கருத்து வகை:செய்தி வாக்கியம், வினா வாக்கியம், விழைவு வாக்கியம்,உணர்ச்சி வாக்கியம். அமைப்பு வகை: தனிவாக்கியம்,தொடர்வாக்கியம், கலவை வாக்கியம், தொடர் கலவை வாக்கியம். எழுவாய் பற்றி - பயனிலை பற்றி - வாக்கியம் எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும் வருதல். தமிழ் வாக்கியத் தனிச்சிறப்பு - இசைவு - திணை விரவி முடிதல் - மறுமலர்ச்சி வாக்கியங்கள்.
அலகு-3:தமிழ் கற்பிக்கும் முறை
கல்வித் திட்டத்தில் தாய்மொழியின் இடம் - நோக்கங்கள் - பயன்கள் - சமூகப் பண்பாட்டு மரபினையறியும் கருவி மொழியாகும் - பிறமொழி கற்பித்தலின் நோக்கங்கள் - வெறுபாடுகள்.
மொழிப்பாடம் ஒரு திறன்பாடம் - நான்கு அடிப்படைத் திறன்கள் - கேட்டல் - படித்தல் - பேசுதல் – எழுதல்-மொழியும் சிந்தனையும்.
அலகு-4:தற்காலக் கற்பித்தல் முறைகள்
விளையாட்டு முறை-நடிப்பு முறை
மேற்பார்வைப் படிப்பு முறை-உரையாடல் முறை -விரிவுரை முறை.
அலகு-5:பிழை ஆய்வும் குறை களைதலும்
தவறு, பிழை வேறுபாடு -கற்றலில் பிழையின் இடம்
பிழை காணல்-பிழை வகைகள் - காரணம் காணல்
பிழை நீக்கும் பயிற்சிகள்
பாட நூல்கள்
1.நல்ல தமிழ் எழுத வேண்டுமா?- அ. கி பரந்தாமனார்
2.தமிழ்பயிற்றல் நுட்பங்கள் - வெ. கலைச்செல்வி
9.TAM09 - தமிழிலக்கிய வரலாறு –II
( சோழர் காலம் முதல் இக்காலம் வரை )
நோக்கம்
இலக்கிய வரலாற்றில் இக்காலம் வரை ஏற்பட்டுள்ள படிநிலை வளர்ச்சியை மாணவர்களுக்கு உணர்த்துதல்.
அ அலகு -1 : சோழர் காலம்
கம்பராமாயணம் – சிற்றிலக்கியங்கள் -கலிங்கத்துப்பரணி –நளவெண்பா ,உரையாசிரியர்கள் – இளம்பூரணர் ,பேராசிரியர்,தெய்வச்சிலையார் ,அடியார்க்கு நல்லார்,பரிமேலழகர்,சைவ சித்தாந்த சாத்திரங்கள்.
அலகு - 2 : நாயக்கர் காலம்
சதகம் ,குறவஞ்சி,பள்ளு,தூது ,உலா,கலம்பகம்,அந்தாதி,பரணி – சமயப்பாடல்கள் – பட்டினத்தார்,சித்தர்கள்,அருணகிரிநாதர்,தாயுமானவர் – காளமேகம் ,இரட்டைப்புலவர்கள்
அலகு – 3 : ஐரோப்பியர் காலம்
தத்துவபோதகர் ,வீரமா முனிவர் ,சீகன் பால்கு ,ஜி.யு.போப் , எல்லீஸ், மாயூரம் வேதநாயகம் பிள்ளை ,எச்.ஏ.கிருட்டிண பிள்ளை ,வள்ளலார்.
அலகு – 4 : இக்காலம் - I
மரபுக்கவிதையின் தோற்றம் ,வளர்ச்சி
புதுக்கவிதையின் தோற்றம் ,வளர்ச்சி
உரைநடையின் தோற்றம் ,வளர்ச்சி
புதினத்தின் தோற்றம் ,வளர்ச்சி
சிறுகதையின் தோற்றம் ,வளர்ச்சி
அலகு -5 : இக்காலம் – II
தமிழில் தகவல் தொடர்பு வளர்ச்சி
தமிழ் நாட்டுபுறவியல்
தமிழ் நாடக வரலாறு
பாட நூல்கள் :
1.தமிழ் இலக்கிய வரலாறு – மு.வ.
2. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
10. TAM10 - COMPUTER APPLICATION –PRACTICAL
(B.COM (CA)- 2007-08 – SDE/ B.COM CA-SEMESTER I)
MS OFFICE
I-MS WORD
1. Type Chairman’s speech/ Auditor’s report / Minutes/ Agenda and perform
the following operations:
Bold, Underline, Font Size, style, Background color, Text color, Line
spacing, Spell Check, Alignment, Header & Footer, Inserting pages
and page numbers, Find and Replace.
2. Prepare an invitation for the college function using Text boxes and clip parts.
3. Design an invoice and Account sales by using Drawing tool bar, Clip Art,
Word Art, Symbols, Borders and Shading.
4. Prepare a Shareholders meeting letter for 10 members using mail merge
operation.
5. Prepare a Wizard by using Wizard/ Templates.
II-MS EXCEL
1. Prepare a mark list of your class (minimum of 5 subjects) and perform the
following operations:
Data Entry, Total, Average, Result and Ranking by using arithmetic
and logical functions and sorting.
2. Draw the different type of charts (Line, Pie, Bar) to illustrate year-wise
Performance of sales, purchase, profit of a company by using chart wizard.
III-MS POWERPOINT
1. Design presentation slides for a product of your choice. The slides must include
name, brand name, type of product, characteristics, special features, price,
Special offer etc. Add voice if possible to explain the features of the product. The presentation should work in manual mode.
2. Design slides for the headlines News of a popular TV Channel. The Presentation Should contain the following transactions:
Top down, Bottom up, Zoom in and Zoom out.
The presentation should work in custom mode.
IV-MS ACCESS
1. Prepare a payroll for employee database of an organization with the following Details:
Employee id, Employee name, Date of Birth, Department and
Designation, Date of appointment, Basic pay, Dearness Allowance,
House Rent Allowance and other deductions if any. Perform queries for
different categories.
2. Create mailing labels for student database which should include atleast three
Table must have atleast two fields with the following details:
Roll Number, Name, Course, Year, College Name, University,
Address, Phone Number.
11.TAM11 - இலக்கணம்-யாப்பும் அணியும்
நோக்கம்
ெ மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் துணையாக இருப்பது இலக்கணம். தமிழ் இலக்கணத்தை ஐந்து வகையாகப் பிரிப்பர். எழுத்து,சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவை. யாப்பு என்பது கட்டுதல் எனும் பொருள்படும். செய்யுளுக்குக் கூறப்படும் இலக்கணம் யாப்பிலக்கணம் எனப்படும். ஒரு செய்யுளில் சொற்களையும் அவற்றின் பொருளையும் நயத்தையும் அழகையும் விளக்கிக் கூறுவது அணியிலக்கணமாகும். இதன் அடிப்படை நோக்கம் செய்யுளை அழகுபடுத்திக் கேட்போர் இலக்கியச் சுவையை அனுபவிக்கச் செய்வதாகும். யாப்பிலக்கணத்தையும் அணியிலக்கணத்தையும் விளக்குவது இப்பாடமாகும்.
அலகு-1:யாப்பும் கவிதையும்
யாப்பு – சொல் விளக்கம் ,யாப்பும் கவிதையும்
கவிதை – சொல் விளக்கம்,கவிதை ஒரு கலை
அலகு-2: காரிகையும் செய்யுள் உறுப்புகள்
செய்யுள் உறுப்புகள் - எழுத்து –அசை-சீர் –தளை-அடி தொடை-எதுகை- மோனை,முரண்,இயைபு,தொடை வகைகள்,இரட்டைத்தொடை அந்தாதித்தொடை,செந்தொடை
அலகு-2: நால்வகைப்பாக்கள்
நால்வகைப்பா-அகவற்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா
மருட்பா-வகைகள் -- ஓசை, அடிவரையறை
அலகு-3:ஒழிபியல்
எதுகை –ஆசெதுகை-கூன் –விட்டிசை-விகாரம் -வகையுளி
வாழ்த்து-வசை-மருட்செந்தொடை-மங்கலச்சொல்-ஆனந்தக்குற்றம்-ஒப்பு
அலகு-4: அணியிலக்கணம் - அறிமுகம்
அணிவகைகள்-தன்மை,உவமை,உருவகம்,தீவகம்,வேற்றுமை,பின்வரும் நிலை,ஒட்டணி,தற்குறிப்பேற்ற அணி,சிலேடை அணி,வாழ்த்தணி.
அலகு-5: புதுக்கவிதையும் யாப்பும்
புதுக்கவிதை –விளக்கம்
புதுக்கவிதையும் யாப்பிலக்கணமும்
கவிதைப் பயிற்சி – ஏதேனும் ஒரு தலைப்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை எழுதுதல்
பாடநூல்கள்:
1.யாப்பருங்கலக்காரிகை
2.தண்டியலங்காரம்
3.கவிஞராக- அ.கி.பரந்தாமனார்
4.நீங்களும் கவிபாடலாம்- கி.வா.ஜெகநாதன்
12. TAM 12 – இதழியல்
நோக்கம்
மக்கள் தொடர்புச் சாதனங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலும் இதழியலை ஆழ்ந்து கற்றலும்.
அலகு-1: மக்கள் தொடர்புச் சாதனங்கள்-அறிமுகம்
இதழ்களின் வரலாறு,ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, பக்கிங்காம், இராஜாராம் மோகன்ராய் ஆகியோரின் இதழியல் பணிகள், இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்.
அலகு-2:இதழியல் சட்டங்கள்
இதழ்ச்சட்டங்கள்–மானநஷ்டம்,நீதிமன்றஅவமதிப்பு,சட்டமன்ற அவமதிப்பு, குழந்தைகள் சட்டம் , பதிப்புரிமைச் சட்டம், இதழ்களின் பதிவுச் சட்டம்.
அலகு-3:நிருபர்
நிருபர்-தகுதிகள்-கடமைகள்-சமூகப் பொறுப்புகள்-செய்தி சேகரிப்பதில் ஏற்படும் இடர்ப்பாடுகள். செய்தி நிறுவனங்கள்வழி வரும் செய்திகளைத் தொகுத்தல்.
அலகு-4:ஆசிரியர் குழு
ஆசிரியர் குழுவின் பணிப்பிரிவுகளும் செயற்பாடுகளும்
1. தலைமையாசிரியர்
2. செய்தி ஆசிரியர்
3. துணை ஆசிரியர்
இதழியல் கலைச்சொற்களும் பதிப்புக் குறியீடுகளும், அச்சுப் பிரதியைத்
திருத்துதலும் (Proof Correction).
அலகு-5:செய்தி வகைகள்
செய்தி வகைகள் ,செய்தித் தலைப்புகள் - தலைப்புகளின் வகைகள் - செய்தி முன்னுரை -முன்னுரை வகைகள்., செய்தி தெரிவிப்பதில் படங்கள் பெறும் இடம் - நிழற்படம் - கருத்துப் படம். கேலிச்சித்திரம் சுருக்கமாக. பக்க அமைப்பும், அதன் வகைகளும் , முதல் பக்கமும், பிறபக்கங்களும் (பக்க அளவில் விளம்பரம் சுருக்கமாக)
செய்முறைப் பயிற்சி :
1. அச்சுப் பிரதியைச் சரிபார்த்தல்
2. பல்வகைச் செய்திகளை எழுதுதலில் பயிற்சி தருதல்
3. தலையங்கம் எழுதுதல்
4. பேட்டி கண்டு எழுதுதல்
5. மாதிரித்தாள் தயாரித்தல்
6. பதிப்புக் குறியீடுகள் தருதல்
7. தமிழ்த்தாளின் பக்க அமைப்பை ஒப்பிடல்
8. முன்னுரை வகைகளை இனங்காணல்
9.தமிழ்தாள்களில் முதன்மை பெறும் தலைப்பு வகைகளைக் கண்டறிதல்:செய்தித் தலைப்புகளைத் தாள்தோறும் ஒப்பிடல்.
பாட நூல்கள்
1. இதழியல் - இரா. கோதண்டபாணி
2. இந்திய இதழ்கள் - பா.ரா. இளங்கோவன்
13.TAM13 – சுற்றுலாவியல்
நோக்கம்
சுற்றுலாக்கல்வி குறித்த அனுபவமும்,தொழில் முறையில் சுற்றுலா தொடர்பான நிறுவனங்களைத் தொடங்கப் பயிற்சியும் பெறுதல்.
அலகு -1:சுற்றுலாவின் வரலாறும் பயனும்
சுற்றுலாத் தோற்றமும் வளர்ச்சியும்-சுற்றுலா சொல் தோற்றமும் பொருளும்-பயணிகள்,வகைப்படுத்துதல்-இன்றைய சமுதாய வாழ்வில் சுற்றுலா பெறுமிடம்-சுற்றுலா செல்வதற்குரிய பருவகாலம்- வாணிகத் தொடர்பு-பண்டமாற்று முறை
அலகு -2:சுற்றுலாத்துறையின் வசதிகள்
சுற்றுலாத் துறையினரால் கொடுக்கப்படும் வசதிகள், தங்குமிடம்- உணவுவிடுதிகள், வழிகாட்டியின் பயன்கள்-வெளிநாட்டுப் பயணம்- வங்கிப்பணி
அலகு -3:சுற்றுலாத் தலங்கள்
தமிழகச் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அறிதல், பழங்காலப் பயணிகள்-வரலாறு-அரசியல்-தொழில்-வாணிகம்- உலகப்புகழ் பெற்ற சுற்றுலா இடங்கள்-கலை பண்பாடு, சமயம் பற்றிய ஊர்கள்.
அலகு-4:பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள்
சுற்றுலா மேம்பாடு நிறுவனங்கள்-மத்திய மாநில அரசுக் கழகங்கள்- மண்டல அலுவலகங்கள், விளம்பரம்-உள்நாட்டு அயல்நாட்டுச் செயல்பாடுகள்-பயிற்சி நிறுவனங்கள் (வழிகாட்டிகள்)
அலகு -5: சுற்றுலாக் கல்வி
உலக வணிகச் சந்தை வளம் பெறுதல்-பொருளாதார மேம்பாடு- சுற்றுலா இடங்களை மேம்படுத்துதல்,தகவல்தொடர்பு-பயணிகளுக்குச் சுற்றுலா தொடர்பான கல்வி-அயல்நாட்டு அனுமதி- நாணயம்-தடுப்பூசிகள்,மருத்துவச் சான்றிதழ்-வழிகாட்டிகள்- நூல்தயாரித்தல்.
பாட நூல்கள்
1. இதயம் பேசுகிறது (அமெரிக்கா) (ரஷியா)-மணியன்
2. அங்கும் இங்கும்-நெ.து.சுந்தரவடிவேலு
3. தமிழகம் ஊரும் பேரும்-ரா.பி.சேதுப்பிள்ளை
14. TAM14 – படைப்புக்கலை
நோக்கம்
தமிழின் நவீன இலக்கியங்களான சிறுகதை,கவிதை,நாடகம்,உரைநடை மற்றும் வருணனை நிகழ்த்துதல் போன்றவற்றில் புலமை பெறச்செய்தல்.
அலகு -1: சிறுகதை எழுதுதல்
சிறுகதையின் இலக்கணம் அறிந்து கொடுக்கப்படும் சமுதாயச் சிக்கலை
அடிப்படையாகக் கொண்டு ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் எழுதப்பழகுதல்.
அலகு -2: மரபு மற்றும் புதுக்கவிதை எழுதுதல்
கொடுக்கப்படும் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு மரபு மற்றும்
புதுக்கவிதை ஒன்றினை இருபது அடிகளுக்கு மிகாமல் எழுதப்பழகுதல்.
அலகு -3 ஒரங்க நாடகம் எழுதுதல்
வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது திரைப்படத்திற்கு -
வழங்கப்படும் சூழலைச் சிந்தனையில் கொண்டு ஐந்து காட்சிகளுக்கு மிகாமல்
ஒரங்கநாடகம் எழுதப்பழகுதல்.
அலகு -4:நேர்முக வருணனை எழுதுதல்
கோயில் திருவிழா - கலை இலக்கியம் - பண்பாட்டு நோக்கு விழா -
விளையாட்டுகள் ஆகியன பற்றிய நேர்முக வருணனையை வானொலி
தொலைக்காட்சி, ஆகியவற்றிற்கு ஏற்றாற்போன்று எழுதப்பழகுதல்.
அலகு-5:உரைநடைக் கட்டுரை எழுதுதல்
அறிவியல், உளவியல், சமூகவியல் கல்வியியல், பொருளியல் – தகவல்களை மனதில்கொண்டு ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதப்பழகுதல்.
பாட நூல்கள்
1. அரிஸ்டாட்டிலின் கவிதையியல் ( மொழி பெயர்ப்பு-அ.அ.மணவாளன்)
2.யாப்பதிகாரம் –புலவர் குழந்தை
3.இலக்கிய மரபு- மு.வ.
4.இலக்கியத்திறன் – மு.வ.
15.TAM15.சங்கச் செவ்வியல் இலக்கியம்
தம நோக்கம்
தமிழ்மொழி உலகச் செவ்வியல் மொழிகளுள் ஒன்று. இத்தகுதியைத் தமிழுக்குத் தந்தது சங்க இலக்கியமே. சங்க இலக்கியங்கள் தமிழர்களின் கருவூலமாகக் கருதப்படுகின்றன. தமிழின் தொன்மைச் சிறப்பையும் தமிழர்களின் விழுமிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடி சங்க இலக்கியம். இவ் இலக்கியம் அகம், புறம் எனப் பெரும் பிரிவுகளுள் அடங்கும். சங்க நூல்களெனக் கொள்ளத்தக்கவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமேயாகும். அவற்றையொட்டியே இப்பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அலகு-1:அகத்திணை
அகத்திணை - அறிமுகம்
திணை வகைகள்
அலகு-2:புறத்திணை
புறத்திணை - அறிமுகம்
புறத்திணை வகைகள்
அலகு-3:சங்கப் புலவர்கள்
கபிலர் -அம்மூவனார் -இறையனார்-தேவகுலத்தார்
நரிவெரூஉத் தலையார் -பதுமனார்
கயமனார் -ஓரம்போகியார் -மாமூலனார் -ஓதலாந்தையார்
ஒளைவயார் -பாலை பாடிய பெருங்கடுங்கோ -பரணர்
அலகு-4:புறநானூறு-பலர் பாடிய பாடல்கள்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
மோசிகீரனார் -ஒளவையார் -பாண்டியன் அறிவுடை நம்பி
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் -கணியன் பூங்குன்றனார்
தொடித்தலை விழுத்தண்டினார் -ஒக்கூர் மாசாத்தியார்
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி -பிசிராந்தையார்
அலகு-5: முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டு- முல்லைப்பாட்டு
பாடநூல்கள்
1.இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் – முனைவர் சி.இலக்குவனார்- 2002
2.தமிழர் சால்பு- சு.வித்தியானந்தன்-2006
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Your request is in progress, please wait.